ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டி கொண்டிருந்தவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஆக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பொன்னம்பலம், ஆனந்தராஜ் ஆகியோரும் முன் வரிசையில் உள்ளனர்.

அப்படி பாலாவின் நான் கடவுள் படத்தின் மூலம் கொடூர வில்லனாக அறிமுகம் ஆனவர்தான் மொட்டை ராஜேந்திரன். அந்த படத்தில் அவரை பார்த்து பயப்படாதவர்கள் யாருமே இல்லை. அந்தளவு வெறித்தனமாக நடித்து இருப்பார்.

அதன்பிறகு அவரது நடிப்பிற்கு தீனி போடும் அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் அமையாததால் ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில்தான் திடீரென காமெடி ரூட்டை கையில் எடுத்துக்கொண்டு வருடத்திற்கு 15 படம் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் காமெடியன் ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டார் என்று கூட சொல்லலாம். ஆனால் சமீபகாலமாக மொட்டை ராஜேந்திரனின் காமெடிகள் சலிப்படைய வைத்துவிட்டது போல. 2019ஆம் ஆண்டு அவர் நடித்த 11 படங்களில் எந்த காமெடி காட்சியும் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவியுள்ளன. இதனால் மார்க்கெட்டை இழந்து தடுமாறி வருகிறார் ராஜேந்திரன். 2020 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து 2, டிக்கி லோனா, டைம் இல்ல, சாந்தனு பாக்யராஜ் பெயரிடப்படாத படம் ஒன்று என குறைவான படங்களே கையில் வைத்துள்ளார்.

மொட்டை ராஜேந்திரன் அதிகமாக இரட்டை அர்த்த காமெடிகளில் நடித்ததே இதற்கு காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.