சார்மி கவுர் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். பல திரைப்படங்களில் ஐட்டம் சாங் காட்சியில் வெளுத்து வாங்கி வருகிறார். இவர் தமிழில் 2002ல் வெளியான காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் அறிமுகமானார் .

இவர் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, லாடம்,மந்த்ரா, லாடம், மந்த்ரா2, பத்து எண்றதுக்குள்ளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி வேடங்களில் கூட மிகவும் துணிச்சலாக நடித்த இவருக்கு தற்போது வயது அதிகமாகிவிட்டதால் பட வாய்புகள் குறைந்துவிட்டதாககிக் கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளராக மாறி படத்தயாரிப்பில் மும்புரம் காட்டி வரும் சார்மி தன்னுடைய காதலன் ஏமாற்றி விட்டதால் என் காதல் தோல்வியில் முடிந்து விட்டது. இதன் காரணமாக இனி திருமணமே செய்துக்கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளார்.என் வாழ்க்கையில் ஒருவரை மிகவும் உண்மையாக காதலித்தேன்.

2 விஷயங்களால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது ஒருவேளை நாங்கள் திருமணம் செய்துக்கொண்டிருந்தாலும் எங்களுடைய திருமணம் தோல்வியில் முடிந்திருக்கும். இதற்கு காதல் தோல்வி எவ்வளவோ மேல் என்று கூறியிருந்தார்.

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஷார்மியும் சில புகைப்படங்களை வெளியிட்டு தனிமையே இனிமை என்று கூறியுள்ளார்.