கடந்த 2009ல் சீமான் என்னும் இயக்குனர் நாம் தமிழர் என்ற இயக்கத்தை துவங்கினார். பின் 2010அவர் அதை ஒரு கட்சியாகவும் பதிவுசெய்தார். இவரின் நாம் தமிர் என்ற கட்சியானது 2016 மற்றும் 2019ல் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. இருப்பினும் தற்ப்போது வரை யார் தமிழர் என்ற கேள்விக்கு பதில் சரியாக இடைக்கவில்லை, இந்த பதிவில் பல்வேறு தலைவர்கள் கூறிய கருத்துகளை பற்றி பார்க்கலாம்!..

1.பொ.மணியரசன் : இவர் தமிழ்தேசிய பொதுவுடமை என்ற அரசியல் இயக்கத்தை நடத்திவருகிறார். இவரின் கூற்று படி “1957க்கு முன் தமிழ்நாட்டில் வாழும் மக்களும்,அவர்களின் தலைமுறைகளும் தமிழர்கள் ; அதேபோல் 1957க்கு முன் மற்ற மாநிலங்களில் குடியேறியவர்களை அந்தந்த மாநில மக்களாக அவர்களும் ஏற்க்க வேண்டும்” என்பதாகும்.

2.சீமான்-நாம் தமிழர் : இவரின் கூற்றுப்படி “தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் “.

3.பாரிசாலன்-தமிழ்தேசியவாதி : “தமிழ் குடியில் பிறந்தவர்கள் மட்டுமே தமிழர்கள்; மற்றவர்களை தமிழராக ஏற்க்க இயலாது”. என்பதே பாரிசாலன் கருத்து.

4.தனியரசு-எம்.எல்.ஏ : “தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தமிழர்கள் “.

5.வேல்முருகன்-தமிழக வாள்வுரிமை கட்சி : “தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள்”. என கூறியுள்ளார். ஆனால் இவர் ‘தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே’ என பல போராட்டங்களை செய்துள்ளார்.

6.ரஜினி-நடிகர் : இவரது கருத்துபடி “தமிழ்நாட்டில் 40வருடம் வாழ்பதால் தானும் தமிழர்”.

7.திருமாவளவன்-விடுதலை சிறுத்தைகள் : “தமிழர்கள் என்று யாரும் கிடையாது; நாமெல்லாம் திராவிடர்கள்”.என கூறியுள்ளார்.

8.சந்திரசேகர்-இயக்குனர் : விஜயின் அப்பாவாகிய இவரின் கருத்துபடி “தமிழ்நாட்டில் நீர் அருந்தியவர்கள் அனைவரும் தமிழர்கள் “.

9.கோபி நைனர்-அறம் இயக்குனர் : “தமிழ் குடியில் பிறந்தவர்கள் தான் தமிழர்கள் “.

10.அர்ஜூன் சம்பத்-இந்து மக்கள் கட்சி : “இந்துக்கள் தான் தமிழர்கள் ; தமிழர்கள் தான் இந்துக்கள் “.

இவர்களை தவிர மேலும் பலர் தமிழர்கள் யார் என்பதற்கு பதில் கொடுத்திருந்தாலும், உண்மையில் பாரிசாலன் மற்றும் கோபி நைனர் கருத்துகள் மட்டுமே சரியானது. 1974ல் சமர்ப்பிக்கப்பட்ட சட்டநாதன் அறிக்கையின் படி தமிழ்குடிகள் பட்டியலிடப்பட்டுள்ளது..