தற்போது உலகம் முழுவதும் கரோனா என்ற வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. சீனாவில் துவங்கிய இந்த வைரஸ் தாக்கமானது அமெரிக்கா, இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு இன்னமும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் ஐபிஎல் போட்டிகள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் மற்றும் ஒரு டி20 போட்டியான டி20 உலகக்கோப்பை போட்டிகள் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்தது. தற்போதைய சூழலில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி “டி20 உலகக் கோப்பையை ஒத்தி வைக்கும் Idea எங்களுக்கு இல்லை, திட்டமிட்டபடி டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் ” என அறிவித்து உள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.