இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளை ஒன்று கிரிக்கெட், அதிலும் குறிப்பாக மற்ற போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம். கடந்த 12 வருடங்களாக ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இரண்டு வருடங்களை தவிர்த்து மற்ற அனைத்து வருடத்திலும் 8 அணிகள் பங்கேற்றன.

ஐபிஎல் போட்டிகள் ஆனது 8 அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மற்றொரு அணியுடன் மோதும், ஒட்டுமொத்தமாக ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடும். இந்தப் போட்டிகளின் முடிவின்படி முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆனால் தற்போது 14 போட்டிகள் என்பதை 7 போட்டிகளாக குறைப்பதற்கு பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளில் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் ஐபிஎல் போட்டிகள் மே மாதம் வரை நடைபெற வாய்ப்பில்லை.

இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளை அக்டோபர் மாதம் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60போட்டிகளை 32 போட்டிகளாக குறைப்பதற்க்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு வீரர்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே இது குறித்த முடிவை பிசிசிஐ எடுக்கவுள்ளது.