தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் இறுதியாக வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் 180 கோடி வரை வசூல் செய்தது. விசுவாசம் திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், இத்திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். வரி மே திரைப்படம் நடிகர் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாகி வருகிறது.

வலிமை திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித் யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடையே நிலவிவருகிறது. நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை சூரரை போற்று திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்காரே அவர்கள் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயிடம் இயக்குனர் சுதா ஒரு கதை கூறி இருப்பதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து இருந்ததாகவும், தளபதி 65 திரைப்படத்தில் இயக்குனர் சுதா மற்றும் விஜய் ஆகியோர் இணைவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது நடிகர் விஜய்க்கு கூட அதே கதையை நடிகர் அஜித்திற்கு இயக்குனர் சுதா கூறி உள்ளதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்து இருப்பதாகவும் எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அஜித் மற்றும் சுதா இணைந்தால் இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் 61ஆவது திரைப்படமாக உருவாகும் என தெரிகிறது.அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதை சமூக பிரச்சனைகளை தோலுரிக்கும் வகையில் இருக்கும் என்ன கோடம்பாக்கத்தில் கிசு கிசுகப்படுகிறது அடுத்து தல அஜித்தின் 61வது படத்தையும் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது