தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருந்தாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை கூற இயலாது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின் நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யும் முருகதாசும் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில் இயக்குனர் முருகதாஸுக்கு அடுத்த திரைப்படத்தில் வெறும் 18 கோடி மட்டுமே ஊதியமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளதாம்.

இயக்குனர் முருகதாஸ் இறுதியாக சர்க்கார் திரைப்படத்தில் 25 கோடியும், தர்பார் திரைப்படத்தில் 30 கோடி சம்பளமாக பெற்றார். ஆனால் ரஜினி நடித்து முருகதாஸ் இயக்கி வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. குறிப்பாக தர்பார் திரைப்படத்தால் தயாரிப்பாளருக்கு 65 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முருகதாசுக்கு 18 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கிறதாம்.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவரது ஊதியத்தையும் குறைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டே மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.