தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி. இவருக்கு என்றும் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது ஆனால் தற்போது கோரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடி இருப்பதால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் மாஸ்டர் படக்குழு மனசாட்சியே இல்லாமல் அந்த படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலரும் தளபதியை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தற்போது வரை தளபதி எந்த ஒரு உதவியும் அளிக்காதது குறிப்பிடத்தக்கது. இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.