அதிக பணம் அளிப்பதால் இளம் வீரர்களின் கவனத்தை IPL திசைதிருப்புகிறது என முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கடுமையான குற்றம் ஒன்றை சுமத்தியுள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அதிரடி முன்னாள் பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங் கூறியதாவது:

IPL அதிக பணத்தைத் தருகிறது. இது இளம் வீரர்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது.

தற்போதைய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறார்கள். ஆனால் இளம் வீரர்கள், அவர்கள் அதிகமாக ஒருநாள் கிரிக்கெட் தான் தங்கள் வாழ்வில் விளையாடுகிறார்கள்,

நான்கு நாள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காண்பிப்பதில்லை.இளம் வீரர்களுடன் பேசும்போது எனக்கு ஒன்று புரிகிறது, அவர்கள் மூத்த வீரர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக மரியாதை தரலாம்.

முன்பு, மூத்த வீரர்களுக்கு நாங்கள் வழங்கிய மரியாதையை தற்போதைய இளம் வீரர்கள் தங்களுடைய மூத்த வீரர்களுக்கு ஒரு போதும் அளிப்பதில்லை என்று தான் கூற வேண்டும்.

மூத்த வீரர்கள் பலர் எங்களுக்கு நிறைய கற்றுத் தந்தார்கள். முக்கியமாக கங்குலி எனக்கு நிறைய ஆதரவளித்தார். அதனால் ஏராளமான நினைவுகள் என் வாழ்வில் உள்ளன. அவையே என்னை சாதிக்க வைத்தது. ஆனால் அதே அளவு ஆதரவை முன்னாள் இந்திய கேப்டன் தோனி, கோலியிடம் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.