நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இப்போது தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அன்னைக்கு காலைல என ரோபோ சங்கர் கதை சொல்வதுபோல் பேசும் நகைச்சுவை பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார். தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர்.

கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.இந்தநிலையில் தற்போது உலகமே கொரோனோ தொற்றினால் பீதியடைந்து இருந்து கொண்டிருக்கும் தருணத்தில் மகளுடன் நகைச்சுவை காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.