தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா, இவர் நேருக்குநேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நேருக்கு நேர் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சூர்யா காக்க காக்க சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். நடிகர் சூர்யா நடிப்பில் 2007 ஆம் வருடத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சிங்கம் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். சிங்கம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்தனர். இவர்கள் இருவரும் இணைந்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார் இத்திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் செய்தது. சிங்கம்-2 திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யா நடித்த பல திரைப்படங்கள் தோல்வி அடைந்தது.

இருப்பினும் சிங்கம்3திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான காப்பான் மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தயாரிப்பாளர்களுக்கு அதிக நஷ்டமும் ஏற்படுத்தவில்லை. நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

இந்தநிலையில் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் ஹரியுடன் அருவா என இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளார் இதில் ஹரி இயக்கும் அருவா திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹிட்டா வை நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை இயக்குனர் ஹரி செய்துள்ளார்.

நடிகை பூஜா தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார், முகமூடி திரைப்படம் தோல்வியடைந்தாலும் பூஜா ஹிந்தியில் நடித்த ஹவுஸ்ஃபுல் 4, மொஹஞ்சதாரோ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தி மட்டுமல்லாது இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் அருவா திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அருவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதிகள் சரிவர முடிவு செய்யப்படவில்லை.

படப்பிடிப்பு தேதிகள் முடிவு செய்யப்பட்ட பின் அந்த தேதிகள் தனக்கு Freeஆக இருந்தால் அருவா திரை படத்தில் நடிப்பேன் என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு முன் அருவா திரைப்படத்தில் நடிகை ரேஷ்மிகா மந்தானா நடிப்பார் எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.