இனிமேல் 15வினாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ் வைக்க இயலும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் வருடத்தில் துவங்கப்பட்ட வாட்ஸப் நிறுவனமானது தனது பயனாளிகளுக்கு 10 வருடங்களாக பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. வாட்ஸ்அப் நிறுவனமானது மற்றவர்களுடன் பேசுவது புகைப்படங்கள் அனுப்புவது மற்றும் வீடியோக்களை அனுப்புவது போன்ற பல அஃப்ஷன்களை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் தங்கள் மனதில் தோன்றும் விஷயங்களை ஸ்டேட்டஸ் ஆக பதிவிடுகின்றனர்.

இந்த ஸ்டேட்டஸ் ஆப்ஷனானது கடந்த 2017ஆம் வருடம் முதல் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பக்கத்தில் பயனாளர்கள் 30 நொடி வீடியோக்களை பதிவிடுகின்றனர். இவை 24 மணி நேரம் காட்சியில் இருக்கும் அதன் பின் தானாக அழிந்துவிடும்.

தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர் இதன் காரணமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது அதிகரித்துள்ளது. இதனால் வாட்ஸ் அப்பின் சர்வர் வேகம் குறைவதால் இனிமேல் வாட்ஸ் அப்பில் 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்க முடியாது அதற்கு மாறாக வெறும் 15 விநாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ் வைக்க முடியும் என அறிவித்துள்ளது. இதனால் வாட்ஸ்அப்பில் அதிக ஸ்டேட்டஸ் வைக்கும் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட இந்த 30 விநாடிகளை உயர்த்துமாறு பலர் கோரிக்கை வைத்தனர் ஆனால் தற்போது 30 வினாடிகளை வெறும் 15 வினாடிகளாக குறைத்து வாட்ஸ்அப் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்..