நடிகர் ஜெயராம் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்குபவர், இவர் தமிழிலும் பல திரைபடங்களில் நடித்திருக்கிறார்.

தெனாலி, பஞ்ச தந்திரம், துப்பாக்கி, ஏகன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார், மேலும் தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இவரின் மகன் காளிதாஸ் ஜெயராமன் மின் குழம்பும் மண் பாணையும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயாராம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரசிகர்களிடையே பெரிய குழப்பதை ஏற்படுத்தியுள்ளது,

கல்யாண கோலத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்த மாளவிகா, அது விளம்பர படத்திற்க்கான போட்டோ ஷூட் என கேப்ஷன் போட்டுள்ளார்.

இதையறியாத நெட்டிசஙள் அவருக்கு திருமணம் வதந்தியை சமூகவலைத்தளத்தில் கேளப்பியுள்ளனர்.