கொரோனா வைரஸானது தன்னிடம் இருக்கலாம் என்கிற அச்சத்தில் ஆசையாக ஓடிவந்த மகளை ஒரு மருத்துவர் கட்டியணைக்க கூட முடியாமல் அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் சல்மான் மருத்துவமனையில் பணிபுரியும் நாசர் அலி அல் ஷாஹ்ரானி என அடையாளம் காணப்பட்ட மருத்துவர், பணி முடிந்து வீடு திரும்புகையில் ஆசையாக ஓடிவந்த மகளை பார்த்துவிட்டு ஓரமாக ஒதுங்கியபடியே அழுதுள்ளார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், சுகாதார வல்லுநர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் அவர்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும், தொற்று நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக நாசர் அலி செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.