இந்தியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் அதிகமான டேட்டாக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

சாதாரண நாட்களை ஒப்பிடும்போது கடந்த சில நாட்களாக இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மற்றும் பயன்படுத்தும் அளவு 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக, டிராய் அறிவித்துள்ளது..

இதன்காரணமாக வீடுகளில் ஆன்லைன் மூலம் பயிற்சி பெறுபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.எனவே பயனாளர்கள் முடிந்த வரை தேவையற்ற காணொளிகளை வலையெளிகளிலும், டிக் டாக்கிலும் காண்பதை தவிர்க்க வேண்டும் என ட்ராய் அமைப்பின் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் இணையதளம் குறைந்த வேகத்தில் செயல்பட்டது, இதற்கு காரணமும் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பயனீட்டு நேரம் அதிகரிப்பு தான் என கூறினார். எனவே முடிந்த வரை தேவையற்ற காரணங்களுக்காக இணையதளத்தை பயன்படுத்துவதை தவிருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.