இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். பெரும்பாலும் கிரிக்கெட் ரசிகர்கள் உலககோப்பை மற்றும் இன்டர்நேஷனல் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளில் ஆர்வ மிகுதியை கொண்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளுக்கு சாதாரண காலத்தில் நடைபெறும் போட்டிகளை விட அதிகமான ரசிகர்கள் உண்டு.

ஐபிஎல் போட்டிகள்:

கடந்த 2008ம் வருடம் முதல் ஐபிஎல் போட்டிகள் ஆனது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மேலும் கூடுதலாக 2 அணிகள் இரண்டு வருடங்கள் மட்டும் பங்கேற்றது ஆனால் அதன் பிறகு கொச்சி மற்றும் புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவில்லை.

ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை உள்ளூர் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் உள்ளூர் வீரர்களுடன் இணைந்து விளையாடுவர். ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் உள்ளன. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பையும் இரண்டாவது இடத்தில் சென்னை அணியும் உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் ஆக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். பல்வேறு சூதாட்ட சர்ச்சைகளை கொண்டிருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக குஜராத் மற்றும் புனே ஆகிய அணிகள் புதிதாக இணைக்கப்பட்டிருந்தது.

பின் மீண்டும் 2018 அவரிடத்தில் களமிறங்கிய சென்னை அணி கோப்பையை வென்றது. இறுதியாக 2019 அவரிடத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி கோப்பையை வென்றது. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா நடைபெறுவதால் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

மகளிர் ஐபிஎல் :

கடந்த 2018 ஆம் வருடத்தில் மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஒத்திகை நடைபெற்றது. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான ஒரு அணியும் மந்தனா தலைமையிலான மற்றொரு அணியும் மோதின. இந்தப் போட்டியில் மந்தானா தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த வருடமும் பெண்களுக்கான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

இருப்பினும் தற்போது வரை மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் ஆண்களுக்கான போட்டிகளை போன்று நடத்தப்படவில்லை. இது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், மகளிருக்கான ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் நடத்துவதற்கு பிசிசிஐ முன்வர வேண்டும், மகளிருக்கான ஐபிஎல் போட்டியில் தேவைப்பட்டால் விதிமுறையில் சிறிது மாற்றங்களைக் கொண்டுவந்து நடத்தவேண்டும், என கூறியுள்ளார்.