நம் தமிழ் சினிமாவில் 1990 காலங்களில் நம் தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் என்றால் அது நடிகை மீனா மட்டுமே. இவர் நடிப்பில் அந்த காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்கள் நம் தமிழ் மொழியில் வெளியாக பல வெற்றிகளை குவித்தது இது அனைவரும் அறிந்ததே.

திருமணத்திற்கு பின்பு இவர் கதாநாயகி கதாபாத்திரங்களில் நடிக்காமல் தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார். இவரது மகளான நைநிகா நடிகர் விஜய் உடன் இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் வெளியான தெறி என்ற படத்தில் நடித்து இருந்தார்.மேலும் நடிகை மீனா தற்போது இயக்குனர் சிவா அவர்கள் இயக்கத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றில் இவர் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டியில் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன் என அவர் தற்போது கூறி உள்ளார்.இவர் அளித்த இந்த பேட்டி தற்போது சமுகவலைதள பகுதியில் வைரலாக பரவி வருகிறது.