து என்ன மாயம்’  என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அந்த படம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்காட்டாலும் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேர்ந்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் படித்தார் அம்மணி.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தது. ஆனால், தொடரி, பைரவா, பாம்பு சட்டை, சர்கார் இப்படி தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்ததால் அவருக்கு பட வாய்புகள் குறைய தொடங்கின.
இடையில் இவர் நடிப்பில் உருவான “மகாநடி” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, நடிகர் ரஜினிகாந்தின் “அண்ணாத்த” படத்தில் ரஜினியின் மகளாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் படம் ஒன்றில் முதன் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர். மேலும், அந்த படத்தில் மேலாடை இன்றி அவர் நடித்துள்ள ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.