கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உலகம் முழுக்க அனைத்து மக்களையும் நாட்டு அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

இந்நோய் பல நாடுகளில் பரவி வருகிறது. இதற்காக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன. இந்தியாவின் சில மாநிலங்களில் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக கூறி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக சினிமா வட்டாரத்திலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் வரும் மார்ச் 31 வரை தியேட்டர்களை மூடுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த பாகமான நோ டைம் நோ டு டை படம் உலகளவில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த மரைக்காயர் படம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

கேரள அரசின் இந்த முடிவை தமிழக அரசும் பின்பற்ற வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது எனவும் கூறுகிறார்கள்.

கொரானா வைராஸ் உலகின் பல தொழில் நிறுவங்கள்முடங்கி கிடக்கின்றன. சீனாவின் ஒட்டு மொத்த உற்பத்தி அளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுதும் கடுமையான உற்பத்திதிறன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் சாதாரண மானது தான் என்றாலும் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது தான் கொரோனா வைரஸ் மீதான மக்களின் அச்சத்திற்கு காரணம் என கூறுகிறார்கள். இந்த மாத இறுதிக்குள் இந்த வைரஸிற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.