தற்போது இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் படுமோசமாக சொதப்பியது. 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியை அடைந்து ஒயிட்வாஷ் ஆனது.தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் படுகேவலமான பேட்டிங் மட்டும் தான். அணியின் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை யாருமே சரியாக ஆடவில்லை.

மேலும் முதல் போட்டியில் மயன்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். ஆனால் அவர் இரண்டாவது போட்டியில் சரியாக ஆடவில்லை. விராட் கோலி, ரஹானே, புஜாரா, பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் என அனைவருமே பேட்டிங்கில் ஏமாற்றமளித்தனர். இந்திய அணியின் அனுபவமான விக்கெட் கீப்பர் சஹா. ஆனால் அவர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் புறக்கணிக்கப்படுகிறார்.

தற்போது இந்நிலையில், சஹாவை சேர்க்காததை விமர்சித்து பேசியுள்ளார் சந்தீப் பாட்டீல். இதுகுறித்து பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல், ரிஷப் பண்ட்டை முன்னிறுத்துவதன் மூலம் ரிதிமான் சஹாவின் கெரியருடன் விளையாடுகிறீர்கள் என்பதை மறக்காதீர்கள் என கூறினார்.