உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரராக இருப்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஏபிடி. இவர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக பல்வேறு ஒருநாள் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல்வேறு ரன்களை குவித்து மற்றும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் .மேலும் இவர் பேட்டிங் செய்யும் போது எதிரணியில் உள்ள பவுலர்கள் கண்டிப்பாக பீதியில் தான் இருப்பார்கள்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவிப்பு விடுத்திருந்தார் அதன் பிறகு இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் போட்டிகளிலும் இவர் பங்கு பெற்று விளையாடி வருகிறார்.

தற்போது தென்ஆப்பிரிக்க அணியின் மூத்த பயிற்சியாளரான மார்க் பவுச்சர் தெரிவித்த பேட்டி ஒன்றில் நாங்கள் வலுவான அணியை அடுத்துவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக உருவாக்கி வருகிறோம் அதில் ஏபிடி கண்டிப்பாக விளையாட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார் இதனால் ஏபிடி யின் முடிவை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் உள்ளனர்.