சென்சேஷனல் கிளாமர் குயின் “மாளவிகா மோகனன்”. தன்னுடைய அழகை படம் போட்டு காட்டுவதில் அம்மணிக்கு நிகர் அவரே தான்.

“பேட்ட” படத்தின் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அவரை பார்த்தபோது யாரும் யூகித்திருக்க மாட்டார்கள் அவர் தான் தளபதி64 படத்தின் ஹீரோயின் என்று.

மாஸ்டர் படத்தில் நடிக்க போல்டான நடிகை வேண்டும் என்பதால் நடிகை மாளவிகா மோகனனை அணுகியுள்ளார் இயக்குனர் லோகேஷ். விஜய்க்கு ஹீரோயின் என்றால் யாரவது மாட்டேன் என்றா சொல்லிட போறாங்க. உடனே ஒப்புக்கொண்டார் மாலு.

படத்தில்வெறுமனே ஹீரோவை சுற்றி வரும் நாயகி இல்லை மாளவிகா. படத்தின் இவரது ஆக்ஷன் காட்சிகளும் உள்ளன. இதற்காக, மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியும் எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வரும் இவர் ரசிகர்களால் கிளாமர் குயின் என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், இவர் அடுத்து யாருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் மாலு தான் ஹீரோயின்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்தபடியாக பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.