தளபதி விஜயை வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக பிரபல நடிகரும், இயக்குனருமாக இருக்கும் பார்த்திபனே உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளார். தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

இதற்கு இடையே தளபதி விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது. அதுவும் இளம் இயக்குனர்களான அருண்ராஜா காமராஜ், சுதா கொங்க்ரா, பிரதீப் ரங்கநாதன், பாண்டியராஜ் என இவர்களில் ஒருவரை வைத்துதான் தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால், தளபதி விஜய் தனது 65வது படத்தை இயக்கும் வாய்ப்பை எந்த இயக்குனருக்கு கொடுக்கப் போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கினால் மாஸாக இருக்கும் என்று ரசிகர் ஒருவர் பார்த்திபனின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் இருந்தார். இதற்கு பதில் அளித்த பார்த்திபன் கூறும்போது நண்பன் படத்தை முதன்முதலில் என்னைத்தான் இயக்க சொன்னார்கள்; அழகிய தமிழ் மகன் படத்திற்கு திரைக்கதை எழுத சொன்னார்கள்; நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று பார்த்திபன் உற்சாகமாக தெரிவித்து உள்ளார்.

இது இப்போது தளபதி விஜய்யின் 65வது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. ஏற்கனவே நடிகர் பார்த்திபன் தளபதி விஜயை வைத்து நண்பன் படத்தை இயக்க வேண்டியது. ஆனால் நண்பன் படம் ரீமேக் படம் என்பதால் விஜயை வைத்து நண்பன் படத்தை இயக்க மறுத்துவிட்டார் பார்த்திபன். பிரம்மாண்டமான கதையில் தளபதி விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் நடிகர் பார்த்திபனின் நீண்டநாள் ஆசை.

அதனால் தான் ரீமேக் படமான நண்பன் படத்தை பார்த்திபன் இயக்க மறுத்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜய்க்கெனவே மிகவும் பிரம்மாண்டமான கதையை செதுக்கி வைத்திருப்பதாகவும் இயக்குனர் பார்த்திபன் ஏற்கனவே பல முறை பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார். விஜய் ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று பார்த்திபன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நாளை இன்னும் அடுத்த நிலையில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதை பார்க்கும்போது தளபதி விஜய்யின் 65வது படத்தை பார்த்திபன் இயக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பார்த்திபன் தமிழ் சினிமாவில் வரலாறு காணாத அளவிற்கு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் கூட ஒத்த செருப்பு படத்தை தானே எழுதி இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படத்தை பார்த்திபன் இயக்கினால் கண்டிப்பாக தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி உலக சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையப் போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சரி, தளபதி விஜய்யின் 65வது படத்தை பார்த்திபன் இயக்கினால் மிரட்டலாக இருக்குமா இருக்காதா… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?