தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்து ஹிட் அடித்தது.

அடுத்து இவர் நடிப்பில் வலிமை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் அஜித் குறித்து ஒரு பேட்டியில் தம்பி ராமையா ‘ஒரு நாள் நான் வாக்கிங் சென்ற போது அஜித் சார் திடீரென்று இறங்கு சார் ஏன் நடந்து வருகிறீர்கள்? காரில் போகலாம்’ என்றார்.

உடனே நான் ‘இல்லை தம்பி வாக்கிங் போகிறேன், நீங்கள் இப்படியெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுக்காதீர்கள், எனக்கு நெஞ்சு வலியே வந்துவிடும்’ என சொல்ல அஜித்தே சிரித்துவிட்டாராம்.