தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டப்படும் நடிகர்கள் என்றால் அது அஜித் மற்றும் விஜய் தான்.

இவர்களுடன் இணைந்து நடிப்பது திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ஒரு கனவு என்று கூட கூறலாம். அந்த வகையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் பாடகி ஷிவாங்கி.

சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு திரையுலகில் நடிக்க ஆசை கிடையாது. ஒரு வேளை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நடிகர் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க ஆசை. அஜித்க்கும், ரஜினிக்கும் மகளாக நடிக்க ஆசை” என்று வெளிப்படையாக கூறியுள்ளார் ஷிவாங்கி.