தமிழ் சினிமாவில் அஜித் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகின்றார். இவர் எப்படி வந்தாலும் அவரை தலையில் தூக்கி கொண்டாட ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் அஜித்துடன் அவள் வருவாளா படத்தில் நடித்தவர் ப்ரித்விராஜ், இவர் வாரணம் ஆயிரம், பயணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் பேசுகையில், அவரிடம் ‘சார் நீங்கள் ஒரு நடிகரை முதலில் நெகட்டிவாக சொல்வது போல் சொல்லி, பிறகு ப்ளஸ் சொல்லலாம், அந்த நெகட்டிவாக இருப்பதை ப்ரோமோவாக பயன்படுத்தலாம்’ என்று சொன்னார்களாம்.

அதற்காக ப்ரித்விராஜ் ‘அஜித்திற்கு நடிப்பில் ஒரு அர்ப்பணிப்பே இல்லை’ என்று கூறுவது போல் கூறிவிட்டு, அவர் எப்படி வந்தாலும் அழகு தான், குண்டாக இருந்தாலும் அழகு, ஒல்லியாக இருந்தாலும் அழகு, ஏன் வெள்ளை முடியிலும் அழகு’ என்று கூறியுள்ளார்.

இதில் அஜித்தை நெகட்டிவாக கூறியதை மட்டும் கட் செய்து ஒரு சில பரப்ப, அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.