ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நான் சிரித்தால் படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படத்தில் ஆதிக்கு எப்போது எமோஷனல் ஆனாலும் உடனே சிரித்துவிடும் ஒரு நோய் உள்ளது.

இதனால், பல இடங்களில் இவர் பிரச்சனையில் மாட்டி, அதிலிருந்து மீண்டும் வருவதே இப்படத்தின் கதை.

இந்நிலையில் இப்படத்தில் விஸ்வாசம் படத்திற்கு ஆதி செல்லும் போது கிளைமேக்ஸ் சீன் பார்த்து ஆதி சிரிக்கின்றார், அப்போது ரசிகர்கள் நீ விஜய் பேன் தானே என்று சொல்லி அடிக்கின்றனர்.

அதோடு அஜித்தின் சில படங்களில் வரும் வசனமான முதுகில் குத்திவிட்டார்கள் வசனத்தை இதில் ஒரு ரசிகர் சொல்வது போல் வைத்து கலகலப்பாக்கியுள்ளனர்.

அது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் என சிறுவர்களை காட்டி தேம்பி தேம்பி அழுவது போல் காட்சிகள் வைத்துள்ளனர், இயக்குனருக்கு செம்ம குசும்பு தான் என இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.