தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. பிகில் திரைப்படத்தின் வசூலில் முறைகேடு நடந்துள்ளது என வருமான வரித்துறை தயாரிப்பு நிறுவனம் வினியோகஸ்தர் அன்புசெழியன் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தியது. இதில் நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த தொகையும் கிடைக்கவில்லை. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்ஸ்ஸியர் அன்புச்செழியன் ஆகிய வீடுகளில் இருந்து 300 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் வருமான வரித்துறை விசாரணை முடிந்து படப்பிடிப்புக்கு சென்றபோது பாஜகவினர் நெய்வேலியில் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என போராட்டம் நடத்தினார். இதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் நெய்வேலி படப்பிடிப்புகள் அனைத்தும் உள்ளது..

இதனை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் Thank you நெய்வேலி என பதிவிட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதனுடன் ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட ஒரு செல்பி ஐயும் வெளியிட்டுள்ளார். வருமான வரித்துறை சோதனைக்கு பின் நடிகர் விஜய் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கூலாக பதில் சொல்லும் விதமாக இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.