சீமான் இயக்குனராக இருந்த போது தன்னை காதலித்ததாகவும், அதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஜெயலட்சுமி கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில், சீமான் முதலில் பெரியர் கொள்கைகளைத்தான் பின்பற்றினார். சிவனை மிகவும் அநாகரிக்காம கிண்டலடிப்பார். தற்போது முருகன் என் முப்பாட்டன் என்கிறார். நான் படப்பிடிப்பிற்கு வரும் போது விபூதி பூசி இருந்தால் கிண்டல் செய்வார். ஆனால், தற்போது சிதம்பரம் கோவிலில் பட்டை போட்டுக்கொண்டு நிற்கிறார். என்னை யார் என்றே உங்களுக்கு தெரியாதா? சரி இருக்கட்டும். நீங்கள் எத்தனை பெண்களை சீரழித்திருக்கிறீர்கள் என எனக்கு தெரியும். ஒன்றா இரண்டா..?’ என பகீர் தகவல்களை அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.