தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜீத். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து உள்ளது. கடந்த ஆண்டு தல அஜித் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் பிளாக் பஸ்டர் அடித்தது. இந்நிலையில் தல அஜித் அவர்கள் விஜய், விக்ரம்,பிரசாந்த்,கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் சத்யராஜ் உடன் பகைவன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த ஒரு படத்தில் மட்டும் தான் இவர் சத்யராஜுடன் இணைந்து நடித்து உள்ளார். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பகைவன் படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ரமேஷ் பால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்த படம் தான் பகைவன். இந்த படத்தில் அஜித் குமார், சத்யராஜ், அஞ்சலா ஷாவரி, ரஞ்சிதா, கே.எஸ். ரவிக்குமார், நாகேஷ், விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை வி.சுந்தர் அவர்கள் தயாரித்து இருந்தார். இந்த படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் அவர்கள் வேலை தேடும் பட்டதாரியாக அலைகிறார். பல இடங்களில் வேலை தேடி அலைகிறார். ஆனால், பணத் தேவையின் காரணமாக இவருக்கு வேலை கிடைக்காமல் இருக்கிறது. இவர் பணத்திற்காக மினிஸ்டர் மகளை கடத்துகிறார்.

பின் மகளைக் கொடுக்க வேண்டும் என்று பணத்தை கேட்டு மிரட்டுகிறார். மினிஸ்டர் தன் மகளையும், பணத்தையும் காப்பாற்றுவதற்காக சத்யராஜ் என்ற ரவுடியை அனுப்பி வைக்கிறார். கடைசியில் அஜித்துக்கு வேலை கிடைத்ததா? எப்படி தப்பிக்கிறார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமான கதை. தற்போது இந்த படத்தில் சத்யராஜ் –அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சத்யராஜ்– அஜித்தும் இணைந்து நடித்து உள்ளார்களா என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

தற்போது தல அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கும் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.