தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் விஜய் டிவி ரம்யா.

விஜய் டிவி ரம்யா தனது தனித்துவமான ஸ்டைலின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர்.விஜய் டிவியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.திரை வாழ்க்கையில் இப்படி இருந்தாலும் அவருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை.கணவருடன் ஏற்பட்ட கருது வேறுபாட்டின் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தற்போது தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய் டிவி ரம்யா மனதுவிட்டு பேசியுள்ளார்.அந்த நேர்காணலின் போது உங்களுக்கு என்ன மாதிரி பையன் பிடிக்கும் என கேள்வி கேட்ட போது,  எனக்கு கருப்பு சிவப்பு ந்னு எந்த பாகுபாடும் இல்லை , நல்ல மனுஷனா இருந்தா மட்டும் போதும்னு சொல்லிருக்காங்க.

அந்தவகையில் மிகவும் பக்திமானாக இருக்கும் ரம்யா தற்போதுசமீபத்தில் கோவில் ஒன்றிற்கு சென்றுள்ளார்.சிட்டுக்குருவிகளை பிடித்து அதனுடைய காதில் தனது பிரார்த்தனையை சொல்லும் வித்தியாசமான வேண்டுதல் செய்துகொண்டிருந்தார்.

அந்த வீடியோவில் குட்டையான ஒரு பிராக் ஒன்று அணிந்திருந்தார்.அதை பார்த்த ரசிகர்கள் இப்படியேதான் கோவிலுக்குள் போவீங்களா ?? என கமெண்ட் போட்டு கலாய்த்துவருகின்றனர்.