தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் தற்போது வரை 63 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை குவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய் பல ரீமேக் திரைப்படங்களில் நடித்துள்ளார், அதில் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியடைந்தன. ஏற்கனவே கடந்த பதிவில் தோல்வியடைந்த விஜயின் ரீமேக் திரைப்படங்களை பற்றி பார்த்துவிட்டோம். இந்த பதிவில் வெற்றியடைந்த டாப்5 திரைப்படங்களை பற்றி காணலாம் ..

5.காதலுக்கு மரியாதை : கடந்த 1997 ஆம் வருடம் வெளியான இத்திரைப்படம், ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்காக வெளியாகியிருந்தது.இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மேலும் நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் காதலுக்கு மரியாதை திரைப்படம் அமைந்தது.

4.பிரண்ஸ் : 2001 ஆம் வருடத்தில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ், இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர் பிரண்ட்ஸ் திரைப்படமும் மலையாளத்தில் வெளியாகி இருந்த படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றியைப் பெற்றது.

3.நண்பன் : இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக வெளியாகியிருந்த திரைப்படம் நண்பன், 2012 ஆம் வருடத்தில் வெளியான இத்திரைப்படம் அனைத்துவித ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2.கில்லி : மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் வருடத்தில் கில்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கில்லியும் இடம்பெற்றுள்ளது.

1.போக்கிரி : நடிகர் விஜய்யின் சிறப்பான திரைப்படம் என்றால் போக்கிரி என்று தான் அனைவரும் கூறுவார்கள். தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக 2007 ஆம் வருடத்தில் வெளியான திரைப்படம் தான் போக்கிரி, இத்திரைப்படம் நடிகர் விஜய்க்கு ஒரு புதுவித அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.