தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்குமே அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவர்கள் படங்கள் வெளியாகும் போது திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அஜித் தற்போது வலிமை படத்திலும், விஜய் தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்கள்.

கடந்த பொங்கலை முன்னிட்டு சன் டிவி பல புதிய படங்களை ஒளிபரப்பினர். அந்த வகையில் விஜயின் பிகில் படத்தின் முதல் ஒளிபரப்பும் நடந்தது. இந்த படத்தின் டிஆர்பி கண்டிப்பாக சாதனையை படைக்கும் என தளபதி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா இதற்கும் ஒரு படி மேலே போய் ‘கண்டிப்பாக பிகில் டிஆர்பி புது சாதனை படைக்கும்’ என அவருடைய ட்விட்டரில் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன் படி பிகில் திரைப்படத்தின் டிஆர்பி, இதற்குமுன்னர் விஸ்வாசம் படம் செய்த டிஆர்பி ரெக்கார்டை உடைக்க தவறியுள்ளது. அதோடு இதற்குமுன் விஜய் ஆண்டணி அவர்களின் பிச்சைக்காரன் படத்திற்கு கிடைத்த டிஆர்பி கூட பிகிலுக்கு கிடைக்கவில்லை என்பதே கசக்கும் உண்மை.

அதன்படி இதுவரை அதிகமாக டிஆர்பி ரேட்டிங் பெற்ற படங்களின் விபரம் இதோ

All Time Top 5 Tamil Premiere TV Impressions

1. #Viswasam – 18143000

2. #Pichaikkaran – 17696000

3. #Sarkar – 16906000

4. #SeemaRaja – 16766000

5. #Bigil – 16473000

தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மொத்தத்தில் இவ்வளவு ப்ரமோஷன் பப்ளிசிட்டி செய்யப்பட்டு வெளியான பிகில் திரைப்படம டிஆர்பியில் சாதனை படைக்காதது தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அட தலய விடுங்க, விஜய் ஆண்டணி சாதனையை கூடவா பிகிலால் உடைக்க முடியவில்லை என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப் படுகிறது.

இந்த விஸ்வாசம் பட சாதனையை இனி வலிமை படம்தான் உடைக்கும் என தல ரசிகர்கள் தரப்பில் காத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் பிகில் சத்தம் தியேட்டர்களிலும் சரி, வீடுகளிலும் சரி உஸ்ஸாகவே முடிந்துள்ளது.