கடந்த இரண்டு வருடங்களாக அமோகமான வாழ்க்கையை வாழ்ந்த உங்களுக்கு இந்த வருடம் சனி பகவான் சற்று சங்கடங்களை தரப்போகிறார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதுவரை 6ஆம் இடத்தில் இருந்த சனி உங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.

தற்போது 2019 குரு பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் குரு ஆறாம் இடத்தில் இருக்கிறார். இதனால் ஒவ்வொரு காரியமும் மிகவும் கவனமாக, சிரமத்துடன் செய்து முடிக்கக் கூடிய நிலை தான் நீடிக்கும்.

இந்த வருட சனிப்பெயர்ச்சிக்கு சனி பகவான் உங்கள் இராசிக்கு 7-ஆம் இடத்திற்கு வரப்போகிறார். இதனால் உங்களின் அனாவசிய பேச்சால் நல்ல பெயர் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. அவசரப்பட்டு எந்த வார்த்தையும் விட்டுவிட வேண்டாம். நிதானமாக யோசித்து பேசுவதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

பிரச்சினைகளை தரப்போகும் சனிப்பெயர்ச்சி என்று எந்த பயத்தையும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு சோதனையை கொடுக்கப்போகும் சனிபகவான், அதனைத் தொடர்ந்து பல சாதனைகளையும் தரப் போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

விடாமுயற்சி செய்பவர்களுக்கு சனிபகவான் வெற்றி வாய்ப்பை தந்து கொண்டேதான் இருப்பார். நேர்மையாக இருங்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். புதியதாக நண்பர்களை சேர்த்துக் கொள்வதில் கவனத்துடன் இருங்கள்.

கெட்ட சகவாசம் உங்களின் வாழ்க்கையை திசை மாற்றி விடும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இருவரும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பிரிவினை தவிர்க்கலாம்.

உறவிலும், பொது இடங்களிலும் யாராக இருந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வதால் உறவு பலப்படும். சிக்கல் தீரும். மன அமைதி ஏற்படும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். ஆனால் அது நீங்கள் எதிர்ப்பார்த்த வேலையாக இருக்குமா என்பது சந்தேகம். உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலை கிடைத்தாலும் எந்தவித கவலையும் இல்லாமல், முழு ஆர்வத்துடன், அதிகமான உழைப்பையும் முதலீடாக போட்டால் தான் நல்ல பெயர் வாங்க முடியும்.

கிடைத்த வேலையை மனநிறைவோடு செய்யுங்கள். சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. பின் வரப்போகும் காலங்களில் நல்ல வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களிடம் உஷாராக பழகுங்கள். வீட்டிற்கு உள்ளே வரும்போது அலுவலகப் பிரச்சினைகளை, வீட்டு வாசலிலேயே விட்டுவிடுங்கள்.

அலுவலகத்திற்கு உள்ளே நுழையும்போது, வீட்டு பிரச்சனையை அலுவலக வாசலிலேயே விட்டுவிடுங்கள். வீட்டுப் பிரச்சனையையும், அலுவலக பிரச்சனையையும் போட்டு குழப்பிக் கொண்டால் பிரச்சனை உங்களுக்கு தான்.

சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு சுறுசுறுப்பாக செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் அடையலாம். உடன் படிக்கும் சக மாணவர்களிடம் தன்னலம் பாராமல் பழகுங்கள். அன்றாடம் படிக்க வேண்டியதை அன்றைக்கே படித்து முடித்து விடுங்கள். நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம்.

திருமணத்தில் சில தடங்கல்கள் வரும். ஆனால் பெரியோர்களின் பேச்சை கேட்டு நடப்பது நன்மை தரும். எந்த அவசரமும் இல்லாமல் எட்டு மாதங்கள் கழித்து வீட்டில் சுப விசேஷங்களை நடத்தினால் சங்கடங்களை தவிர்க்கலாம்.

உங்களது வியாபாரத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ள தான் வேண்டும். உங்களிடம் வேலை செய்பவர்கள் உங்களது பேச்சை காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள். நீங்கள் சொல்லும் சொல்லுக்கு எதிராகத்தான் நடப்பார்கள்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள், வெல்லம், சாதம் கலந்த கலவையை பசுமாட்டிற்கு கொடுத்து வந்தால் உங்களுக்கு வரும் சங்கடங்கள் குறையும்.