தலைமறைவாக உள்ள நித்யானந்தா கியூபா மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நித்யானந்தா மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில் கடத்தல் வழக்கு பதிவு செய்த பின் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.

இதனையடுத்து இன்டர்போல் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ மூலம் உதவி கோரிய குஜராத் போலீஸ் சர்வதேச உளவுத்துறை மூலம் தற்போது நித்தியானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இவர் தற்போது கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாகவும் அந்நாட்டு மக்களின் பாஸ்போர்ட்டை பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கைது செய்த பின்பு நித்தியானந்தா சிறையிலிருந்து வெளியே வரமுடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைப்பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்.