கிராமத்து படங்களை கொடுப்பதில் வல்லவர் என்றால் அது நம்ம இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு கை வந்த கலை என்று தான் சொல்லனும். அந்த அளவிற்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுப்பார்.

இவர் இயக்கத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் கிராமத்து பின்னனியில் எடுக்கப்பட்ட படம். இப்படி இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி தான்.

ரசிகர்களிடமும் சரி வசூலிலும் சரி அமோக வரவேற்ப்பு பெற்ற படங்களாக அமைந்தது. தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் கூட்டனி வைக்க இருக்கிறாராம். இதனை பற்றி தகவல் தான் சமூகவளைதத்தில் வைரல். தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

தொடர்ச்சியாக அதிரடி கதைகளில் நடித்து வரும் விஜய் அடுத்து கிராமத்து கதையம்சத்தில் கூட்டு குடும்ப பாங்கான படமொன்றில் நடிக்க விரும்புவதாகவும், ஏற்கனவே குடும்ப படங்கள் எடுப்பதில் திறமையானவர் என்று பெயர் வாங்கிய பாண்டிராஜுக்கு விஜயின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. தளபதி விஜயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்டதட்ட உறுதி ஆகியுள்ளது. ஆனால் அது பாண்டிராஜ் விஜய் இனையும் படத்தை தான் தயாரிக்கிறாரா என்பது இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. தளபதி ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் தளபதி யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும்.