தல அஜித் தற்போது இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

வலிமை படம் முதலில் ஹைதராபாத்தில் தான் தொடங்கப்பட்டது. பிறகு படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. 2020 தீபாவளி வெளியீடாக தயாராகிக்கொண்டிருக்கும் வலிமை படத்தில் இருந்து ஏதேனும் அப்டேட் வராதா என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது தல அஜித் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செம கெத்தாக சண்டை போடும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே வலிமை படம் அதிரடி ஆக்ஷன் கலந்த திரைக்கதையில் உருவாகி வருவது என்பதற்கேற்ப படத்தின் ஆரம்பமே சண்டைக் காட்சியில் தொடங்கியுள்ளது.

சமீபகாலமாக தல அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. அந்த வகையில் தீபாவளி விடுமுறை நாட்களில் வெளியாக இருக்கும் வலிமை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தல அஜித் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தல அஜீத் தற்போது விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் காயத்ரி மற்றும் நேற்று இன்று நாளை படங்களை இயக்கிய இயக்குனர் ஆகியோரை அழைத்து கதை கேட்டு உள்ளாராம்.

இவர்களில் ஏதாவது ஒரு இயக்குனரை தேர்ந்தெடுத்து அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளம் இயக்குனர்களுக்கு தல அஜித் வாய்ப்பு கொடுத்துள்ளதால் இப்படம் மீது அனைத்து தரப்பு ரசிகர்களும் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.