தமிழ்சினிமாவில் தற்ப்போதய நடிகர்களில் உச்சத்தில் இருக்கும் இரண்டே தமிழ் நடிகர்கள் விஜய் மற்றும் சூரியா. இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மற்றும் பிரன்ஸ் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பின் இருவரும் தனித்தனியே படங்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பலமுறை விஜய் மற்றும் சூரியாவின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளன. அவ்வாறு ஒரே நாளில் வெளியான திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..

ஷாஜகான் VS நந்தா : 2001ஆம் வருடம் நவம்பர் 14ஆம் தேதி ஷாஜகான் மற்றும் நந்தா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின, இதில் ஷாஜகான் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தால் இத்திரைப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது நந்தா திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார் இத்திரைப்படம் அம்மா மற்றும் மகனுக்கு இடையேயான உறவை வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

யூத் VS ஸ்ரீ : 2002ஆம் வருடம் ஜூலை 20ஆம் நாள் விஜய் நடிப்பில் யூத் திரைப்படமும் சூர்யா நடிப்பில் ஸ்ரீ திரைப்படமும் வெளியாகின. இந்த முறை விஜயின் யூத் திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

திருமலை VS பிதாமகன் : 2003ஆம் வருடத்தில் விஜய் நடிப்பில் திருமலை திரைப்படமும் சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்திருந்தார் பிதாமகன் திரைப்படமும் வெளியாகின. இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

அழகிய தமிழ் மகன் VS வேல் : 2007 ஆம் வருடத்தில் விஜய் நடிப்பில் அழகிய தமிழ் மகன் திரைப்படமும் சூர்யா நடிப்பில் வேல் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. இதில் இரண்டு திரைப்படங்களிலும் சூர்யா மற்றும் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். வேல் திரைப்படம் கிராமத்திலும் அழகிய தமிழ் மகன் திரைப்படம் Cityலும் வெற்றியை பெற்றது.

வேலாயுதம் VS 7ம் அறிவு : 2011-ம் வருடத்தில் அக்டோபர் 21ம் தேதி விஜய் நடிப்பில் வேலாயுதம் திரைப்படமும் சூர்யா நடிப்பில் ஏழாம் அறிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன.

மாஸ்டர் VS சூரரை போற்று : வருகிற ஏப்ரல் மாதம் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படமும், வெளியாக உள்ளது இவ்விரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளன