தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தற்போது இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று இயக்குனர் செல்வராகவனிடம் அனைத்து பேட்டியிலும் கேள்வி கேட்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் செல்வராகவன் அவர்கள் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கினார்.

அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் எப்போது வரும் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிப்பேன் என்று உறுதியாகக் கூறினார். இதனால் இந்தத் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.