1983-ல் தனது 13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய் ஜி மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.

கவர்ச்சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொள்ளையடித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘தங்கம்’, ‘வம்சம்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும், குயின் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இது, மறைந்த முதல்வர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை மையமாக கொண்டு உருவாகி வருகின்றது.

இதில், புரட்சி தலைவியாக நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றிலும், ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தொப்புள் தெரியும் படி புடவை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.