பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பெரும்பான்மையான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. ஆனால், பிக்பாஸ் வீட்டில் இவரது கேரக்டர் என்ன என்றே பலருக்கும் புரியவில்லை.

இயக்குனர் சேரனை அப்பா அப்பா என்றுசுற்றி சுற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் சீரியல் நடிகர் கவினுக்காக சேரனை விட்டுக்கொடுத்து பேசினார். மேலும், கவின் சேரனை தரக்குறைவாக பேசிய போது கமுக்கமாக கவினுக்கு ஆதரவாக பேசினார்.

பிக்பாஸ் முடிந்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த படத்திலும் இவர் கமிட்டானதாக தெரியவில்லை. உடல் எடையை குறைக்க முயற்சித்து வரும் இவர் அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், அவர் வெளியிடும் புகைப்படங்களில் அவரை விட மேக்கப் தான் அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் மஞ்சள் நிற புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்ட அவரை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க நயன்தாராநு நெனப்பா.. பிக்பாஸோட நிறுத்திக்கணும் இந்த போட்டோஷூட் எல்லாம் உங்களுக்கு செட் ஆகால என்று கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்..