தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ், இவர் நடிப்பில் வருகிற 15-ம் தேதி பட்டாஸ் வெளியாக உள்ளது. இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் தனுசுக்கு ஜோடியாக சினேகா மற்றும் Mehrene Kaur Pirzada ஆகியோர் நடித்துள்ளனர்.

பட்டாசு திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தது குறித்து பல கருத்துக்களை தெரிவித்தார். நடிகர் தனுஷுடன் நீங்கள் எந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் ‘ நெற்றிக்கண் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் Playboy கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும், எனவே நெற்றிகண் திரைப்படத்தின் ரீமேக் உருவானால் நான் நடிப்பேன்’ என்றார்.

நடிகர் தனுஷ் ஏற்கனவே மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ரீமேக்கான திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார், மேலும் நடிகர் தனுஷ் தனது படங்களுக்கு ரஜினி படங்களின் தலைப்புகளை வைத்துள்ளார் குறிப்பாக படிக்காதவன், பொல்லாதவன்,தங்கமகன் போன்றவற்றைக் கூறலாம்.

நடிகர் ரஜினியின் பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன அதில் குறிப்பாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பார்க்கப்படுவது தில்லுமுல்லு. ஒரே நபர் 2 நபராக நடித்து முதலாளியை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த தில்லுமுல்லு திரைப்படத்தை அதே பாணியில் நடிகர் சிவா நடித்திருந்தார்.