தல அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சமீபகாலமாக பாக்ஸ் ஆபீசை பதம் பார்த்து வருகின்றன. அந்த வகையில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் சக்கை போடு போட்டது.

அந்தவகையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என இயக்குனர் தரப்பு தெரிவித்தது. இதனால் இந்த படத்திற்காக கட்டு மஸ்தான உடலைப் பெற தொடர்ந்து ஜிம்மில் ஈடுபட்டு வருகிறார் தல அஜித்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இப்பொழுதே ஏற்பட்டுள்ளது. அந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தல அஜித்க்கு ஒரு இயக்குனரின் வேலை பிடித்தால் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்புகளைக் கொடுத்து வருவார். அந்த வகையில் தொடர்ந்து சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து நான்கு படங்கள் இயக்கினார் என்பதும் குறிப்பிட வேண்டியது.

அதே வரிசையில் தற்போது எச். வினோத் இணைந்துள்ளார். தல அஜீத்துக்கு, வினோத்தின் வேலை செய்யும் விதம் மிகவும் பிடித்துள்ளதாம். இந்நிலையில் தல 61 படத்தை இண்டர்நேஷனல் லெவலில் உருவாக்க அதற்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டார் வினோத்.

அஜித்திடம் கூறிய ஒரு கதையில், ஓஷன் லெவன், டாக்ஸி போன்ற ஹாலிவுட் திரைப்படங்களை போன்ற தரத்தில் உருவாக இருக்கிறதாம். அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு டானாகவும், ஒரு மாபெரும் வங்கி கொள்ளை நடக்கும் விதமாக இருக்கும்படி கதை கூறி இருக்கிறார் வினோத்.
மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படம் பெரிதும் பேசப்படும் என நம்புகிறாராம் தல அஜித்.