பிஸியான நடிகர்களில் தற்போது தனுஷும் இணைந்துவிட்டார் எண்று தான் சொல்லனும். அந்த அளவிற்கு தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்துவருகீறார், படத்தின் பூஜை ஆரம்பம் என்று தகவல் வெளிவந்து சில மாதங்களிலே அடுத்த படத்தின் பூஜை பற்றி தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கும் சினிமா வட்டாரங்களுக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துவருகீறது தனுஷின் சினிமா பயணம்.

தொடர்ந்து தனது நடிப்பை வேரொரு கோணத்திற்கு எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார் தனுஷ். அசுரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்து படங்களை முடித்துவருகிறார்.

தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் கூட்டனியில் உருவாகி வந்த படத்தின் பெயர் அன்மையில் இனையத்தில் சுருளி என்று வைரலானது. அதன் பின் இதனை படக்குழு மறுத்துவிட்டது, இதனால் இப்படத்தின் டைட்டில் சுருளி இல்லை என முடிவிற்கு வந்தார்கள் நடிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆனால் ரிலையன்ஸ் நிருவனம் தங்கள் நிறுவனத்தில் தயாரிப்பில் உள்ள படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதில் D40 என்று அழைக்கப்பட்டிருந்த தனுஷின் புதிய படத்தின் பெயரை சுருளி என பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் தனுஷின் படத்தின் டைட்டில் சுருளி என்று தெளிவாக தெரிகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வளைதளப்பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.