தற்போது உடல் உருவத்தை வைத்து நடிகர், நடிகைகள் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும் என திரைப்பட நடிகை வித்யூலேகா ராமன் தற்போது கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றால் பல ஆண் நகைசுவை நடிகர்கள் இருந்து வருகிறார்கள். பெண் நகைசுவை நடிகை என்றால் நீண்ட நாள் வரை கோவை சரளாதான் .தற்போது இளம் நகைச்சுவை நடிகையாக வலம்வருபவர் நடிகை வித்யூலேகா ராமன்.

இவர் தற்போது அளித்த பேட்டியில் உடல் உருவம் எல்லாம் அழுகுதான் ஆனால் இதனை புரிந்து கொள்ளாதவர்கள் உடல் உருவத்தையும் , நிறத்தையும் வைத்து அடுத்தவர்களை தற்போது கேலி , கிண்டல் செய்து அவர்களின் மனதை காயப்படுத்தி வருகிறோம். மேலும் திரைப்படங்களிலும் இது மாதிரியான விஷயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

மேலும் இவர் கூறியதாவது நடிப்பதற்கு திறமை மட்டுமே போதும் இது மட்டுமே தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமாக தற்போது பார்க்கப்படுகிறது.இதை தெரியாத சிலர் உடல்வாகு பற்றி கேவலமாக பேசி வருகிறார்கள் என அவர் தற்போது அந்த பேட்டியில் கூறினார்.