தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன ,அவற்றில் சில படங்களே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகி வெற்றி பெறுகின்றன ஆனால் ஒரு சில படங்கள் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில் பல படங்கள் தயாரிப்பாளர்களால் தான் பிரச்சினையை சந்திக்கின்றது, கடந்த 2019 ஆம் வருடம் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் 2016 ஆம் வருடம் முதல் தயாரிப்பில் இருந்தது. ஆனால் படத்திற்கு ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் 2019 வருடம் வரை வெளியாகவில்லை. இதேபோல் பல படங்கள் தற்போதும் வெளியாகாமல் தயாரிப்பிலேயே உள்ளன அவற்றில் சில முக்கியமான படங்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம் ..

நரகாசுரன் : நடிகர் அரவிந்த்சாமி ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகராக உயர்ந்தார். சிறிது காலம் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் அரவிந்த்சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்தவகையில் அவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார் அதில் ஒரு படம் தான் நரகாசுரன், கார்த்திக் நரேன் இயக்கிய இத்திரைப்படம் கடந்த 2 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை : பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்த திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை, எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் இணைந்து ஒரு பேய் படத்தை எடுக்கிறார்கள் என்றதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 2017ஆம் வருடம் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 2018 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.

அம்மன் தாயி : கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி, இவர் 2017 ஆம் வருடம் நடைபெற்ற பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று பலர் பேசி வந்தனர் அதேபோல் பிக் பாஸ் ஜூலிக்கும் அம்மன் தாய் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் வருடம் இறுதியில் உருவான இத்திரைப்படம் 2019 வருடம் வரை வெளியாகவில்லை.

சர்வர் சுந்தரம் : நடிகர் சந்தானம் நடிப்பில் ஆனந்த் பல்கி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் வருடம் உருவான திரைப்படம் சர்வர் சுந்தரம் இத்திரைப்படம் 2017 ஆம் வருடம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போது வரை சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளியாகவில்லை.

துருவ நட்சத்திரம் : இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் துருவ நட்சத்திரம், என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த உடனே துருவநட்சத்திரம் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டன. கடந்த 2018 ஆம் வருடம் படப்பிடிப்புகள் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது வரை துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவில்லை.

மதகஜராஜா : சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் மருதராஜா, 2018 ஆம் வருடம் முதல் துவங்கப்பட்ட மதகஜராஜா திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். மதகஜராஜா திரைப்படத்திற்குப் பின் விஷால் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து ஆம்பள மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி விட்டன, ஆனால் தற்போது வரை மதகஜராஜா திரைப்பட வெளியாகவில்லை.