நடிகை ஜெயசுதா அவர்கள் 1958-ம் ஆண்டு பிறந்தவர். இவரது இயற்பெயர் சுஜாதா. சென்னையில் பிறந்தவர். 1972-ல் வெளிவந்த பந்தந்தி கப்பூரம் என்ற தெலுங்கு படத்தில் ஜமுனாவின் மகளாக தனது 14-ஆவது வயதில் இவர் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலசந்தர் இவரை அரங்கேற்றம் படத்தில் கமலஹாசனுடன் சிறிய வேடத்தில் அறிமுகம் செய்தார்.

தொடந்து பாலசந்தரின் இயக்கத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் படங்களில் நடித்தார். தங்கத்திலே வைரம், மன்னவன் வந்தானடி, மேல்நாட்டு மருமகள், பட்டிக்காட்டுராஜா, வெள்ளிக்கிழமைவிரதம், தீர்க்கசுமங்கலி, நான்அவனில்லை, சொல்லத்தான்நினைக்கிறேன், மகராசி வாழ்க, பாரதவிலாஸ்,

மேலும் அரங்கேற்றம், நினைத்தாலே இனிக்கும், பட்டாகத்தி பைரவன், ஆயிரத்தில் ஒருத்தி, அபூர்வ ராகங்கள், தவசி, அலைபாயுதே, அந்திமந்தாரை, ராஜதுரை, பாண்டியன், தோழா போன்ற 225-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்தவர் ஜெயசுதா.

இவரது அத்தைதான் புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான விஜயநிர்மலா அவர்கள். இவர் புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கிருஷ்ணா அவர்களின் மனைவி ஆவார். கிருஷ்ணா அவர்கள் தமிழில் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் நடித்தவர். கிருஷ்ணா அவர்களின் மகனே மாஸ் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் பட ஹீரோ மகேஷ்பாபு என்பது குறிப்பிடதக்கது.

இவரது கணவர் நிதின் கபூர் பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடதக்கது. துரதிஷ்டவசமாக ஜெயசுதா அவர்களின் கணவர் 2012-ம் ஆண்டு நிதின்குமார் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்.