தர்பார் படத்திற்கு தமிழ்நாட்டில் மிக பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல் ஈட்டியுள்ளது. வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபிஸ் விவரங்களின்படி தர்பார் சென்னையில் இரண்டு கோடியே 27 லட்சம் ருபாய் வசூலித்துள்ளது.

இதன் மூலம் இரண்டு கோடிக்கும் அதிகமாக முதல் நாளில் வசூலித்த இரண்டாவது ரஜினி படம் என்ற சாதனையை தர்பார் செய்துள்ளது. இதற்கு முன்பு 2.0 படம் 2.64 கோடி ருபாய் வசூலுடன் ஆல் டைம் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்து 2.37 கோடி வசூலுடன் சென்னை ஓப்பனிங் வசூலில் விஜய்யின் சர்கார் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தர்பார் படத்திற்கு 2.27 கோடி வசூலுடன் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அதற்கடுத்த இடங்களில் பிகில், காலா போன்ற படங்கள் இருக்கின்றன.