தமிழ் சினிமாவில் “மீசைய முறுக்கு” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இதையடுத்து “நட்பே துணை” படத்தில் நடித்தார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள “நான் சிரித்தால்” படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இயக்குனர் இராணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், முனிஷ்காந்த், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் ஜனவரி-5 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் சமீபகாலங்களில் விஜய் பார்த்து அதிகம் என்ஜாய் பண்ணிய ட்ரைலர் என்றால் அது “நான் சிரித்தால்” தான் என்றும் அந்த படக்குழுவுக்கு விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி-14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.