விஜய்க்கு என்று மிகப்பெரிய ரசிகர் படை இருக்கிறது. அவரின் படங்களை பற்ரி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருப்பார்கள்.

தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு தீவிரமாக நடந்துவரும் நிலையில் தளபதியின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாகி இருக்கிறார்கள்.

தளபதி தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துவருகீறார். இதன் ரசிகர்களிடமும் சரி வியாபாரம் ரீதியாகவும் வெற்றி பெருகிறது. இதனால் இவர் அடுத்த படத்தை முன்னனி இயக்குனர்களுடன் இணைவாரா அல்லது இளம் இயக்குனர்களுடனே பயணிப்பாரா என்று பெரிய கேள்வி சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இவருடைய படத்தை தயாரிக்க போட்டி போட்டு வருகிறது.

அண்மைகாலமாக தளபதியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பெயர்கள் பற்றி தகவல் வந்துள்ளது. அந்த லிஸ்ட் இதோ…

தற்போது ஷங்கர், முருகதாஸ், பேரரசு, மகிழ்திருமேனி, வெற்றிமாறன் இதில் யாருடன் இணைவார் என பெரிய குழப்பம் எழுந்துள்ளது. சமீபத்தில் தளபதி விஜயின் அடுத்த படமான அதாவது தளபதி65 வது படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதிலும் ஷங்கர் தான் அந்த படத்தை இயக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டுவருகிறது. அப்படி ஷங்கருடன் தளபதி விஜய் இணைந்தால் அந்த படம் முதல்வன் இரண்டாம் பாகமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.